“பாரதி மறைந்த நாளில் பாப்பையாவும் மறைந்திருக்கிறார்…” சாலமன் பாப்பையாவின் மறைவு உள்ளத்தை உடைக்கிறது என கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
வைரமுத்துவின் இரங்கல் பதிவு
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் பதிவில், “சாலமன் பாப்பையாவின் மறைவு உள்ளத்தை உடைக்கிறது. பாரதி மறைந்தநாளில் பாப்பையாவும் மறைந்திருக்கிறார். செப்டம்பர் 11 தமிழுக்கு நல்லநாள் இல்லை போலும்.
பட்டிமன்றத் தமிழ் முடிந்துவிட்டதா? பாமரத் தமிழ் மூச்சை நிறுத்திக்கொண்டதா?. கல்லூரிகளில் பயிற்றுவித்த தமிழைக் கடைவீதிக்குக் கொண்டுசேர்த்தவர் சாலமன் பாப்பையா.
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் நூலில் அவர்குறித்தும் எழுதியிருக்கிறேன். சிரிக்க வைத்துச் சிந்திக்கவும் வைத்த மேடைக் கலைவாணர் மறைந்துவிட்டார்.
அவரது நாற்காலி காலியாகவே இருக்கும்; நிரப்ப முடியாது. மதுரைக்கே ஒரு வெறுமை வந்துவிட்டது;மனம் கலங்குகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும் உலகத் தமிழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்து.
