வீதி விபத்துக்களில் நேற்றைய தினத்தில் (28) மாத்திரம் 12 பேர் உயிரிழநதுள்ளனர்.

அதில் 8 பேர் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், ஏனைய 4 பேரும் இதற்கு முன்னர் இடம்பெற்ற விபத்துக்களில் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரித்தார்.

உயிரிழந்த நபர்களில் பாதசாரிகள் நால்வரும், முச்சக்கரவண்டியில் பயணித்த நான்கு பேரும், மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் இருவரும் மற்றும் மேலும் இருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளதை தொடர்ந்து வீதி பாதுகாப்பு தொர்பில் மோசமான நிலைமை உருவாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

வாகன சாரதிகள் மற்றும் பாதசாரிகளின் கவனயீனம் காரணமாக வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்காரணமாக, எதிர்வரும் தினத்தில் பாரிய போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.