இன்று (30) முதல் ஒரு வார காலத்திற்கு அக்குரஸ்ஸ கல்வி வலயத்திற்கு உட்பட்ட கனங்கே சிறி பெரகும்ப மத்திய மஹா வித்தியாலயத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 28 ஆம் திகதி அப்பகுதியில் 7 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தம்புள்ள கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் ஒரு வார காலத்திற்கு மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.