திஸ்ஸமஹாராம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் புதிதாக 27 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குருணாகலை பிரதேசத்தில் இருந்து திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் அமைந்துள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு வந்த நபருடன் தொடர்புடைய 24 பேரே இவ்வாறு புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேபோல், கொவிட் 19 புதிய திரிபு குளியாப்பிட்டி பிரதேசத்தில் பரவி வருவதாக சந்தேகிக்கப்படுவதாக குளியாப்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் உத்பல சங்கல்ப தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் 4 கைதிகள் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
திவுலபிட்டி பிரதேசத்தில் கொவிட் 19 வைரஸ் வேகமாக பரவி வருவதாக குறித்த பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் எஸ்.ஏ.யூ.டி. குலதிலக தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ´கொவிட் மூன்றாவது அலை திவுலபிட்டி பிரதேசத்தில் வேகமாக பரவி வருவதை காணக்கூடியதாக உள்ளது. என்டிஜன் பரிசோதனைகளில் 14 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். 20 ஆம் திகதி மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையில் 12 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. 35 தொற்றாளர்கள் திவுலபிட்டி பிரிவினுள் பதிவாகியிருந்தனர். தற்போதைய நிலையில் சுமார் 90 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இப்படியே சென்றால் சுமார் 150 குடும்பங்களை தனிமைப்படுத்த நேரிடும்´ என அவர் தெரிவித்தார்.