பொதுவாக மனிதர்கள் என்றாலே அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். காரணம் பணம் இன்றி எதுவும் செய்ய முடியாது என்ற நிலையே காணப்படுகின்றது.

வாழ்வில் ஒவ்வொரு நாளும் பணத்தின் தேவை அதிகரித்து செல்கின்றதே தவிர ஒருபோதும் குறைவதே கிடையாது. 

Vastu tips: பர்ஸில் எப்போதும் பணம் நிறையணுமா? இதை செய்தாலே போதும் | How Can I Attract Money As Per Vastu

பெரும்பாலானவர்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் தங்களின் பர்ஸில் பணம் இருப்பதே இல்லை என்றும் பணம் வருவதும் தெரியவில்லை செலவாவதும் தெரியவில்லை என புலம்பியே காலத்தை கழிப்பார்கள்.

வாஸ்து சாஸ்திஜரத்தின் பிரகாரம் பர்ஸில் எப்போதும் பணம் நிறைந்திருக்க வேண்டும் என்றால், நாம் அவசியம் பின்பற்ற வேண்டிய சில முக்கிய வாஸ்து குறிப்புகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Vastu tips: பர்ஸில் எப்போதும் பணம் நிறையணுமா? இதை செய்தாலே போதும் | How Can I Attract Money As Per Vastu

பர்ஸில் ஒரு ரூபாய் கூட மிச்சமின்றி முழுமையாக செலவு செய்யும் பழக்கம் கொண்டவர்களின்  பர்ஸில் ஒருபோதும் பணத்தை சேமிக்கவே முடியாது.

வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில்  பர்ஸில் சுத்தமாக பணம் இல்லாமல் இருப்பது நிதி ரீதியில் எதிர்மறை விளைவுகளை கொடுக்கும். 

Vastu tips: பர்ஸில் எப்போதும் பணம் நிறையணுமா? இதை செய்தாலே போதும் | How Can I Attract Money As Per Vastu

குறிப்பாக ஒரு ரூபாய் நாணயமும், இருபது ரூபாய் நோட்டும் பர்ஸில் எப்போதும் அவசியம் இருக்கவேண்டும்.

இந்த இரண்டையும் எப்போதும் செலவழிக்கவே கூடாது. என்னதான் தவிர்க்க முடியாத சூழ்நிலையாக இருந்தாலும் கூட அதை எடுத்து செலவழிக்காமல் இருப்பதால் அதிக பணத்தை ஈர்க்க முடியும். 

பர்ஸில் எப்போதும் சில்லரை காசுகளை கொஞ்சமாவது வைத்திருக்க வேண்டும் சிலர் நோட்டுக்களை மட்டுமே வைத்திருக்க விரும்புவார்கள்.

Vastu tips: பர்ஸில் எப்போதும் பணம் நிறையணுமா? இதை செய்தாலே போதும் | How Can I Attract Money As Per Vastu

அப்படி செய்வதால், பணத்தை ஈர்க்கும் ஆற்றல் குறையும் என வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

பர்ஸில் தேவையில்லாத பொருட்களை வைத்திருப்பதும் அழுக்காக வைத்திருப்பதும் எதிர்மறை ஆற்றலை ஈர்பதால் பணத்தை சேமிக்க முடியாத நிலை உருவாகும். இதனால் பர்ஸை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

Vastu tips: பர்ஸில் எப்போதும் பணம் நிறையணுமா? இதை செய்தாலே போதும் | How Can I Attract Money As Per Vastu

பணத்தை நீங்கள் செலவு செய்தாலும் அது மீண்டும் மீண்டும் உங்களிடம் வந்து சேரும் என்ற நம்பிக்கையுடன் மகிழ்ச்சியாக செலவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் செலவாகிய பணம் இரட்டிப்பாக திரும்பிவரும் என்று வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.