நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தனிமனித இடைவெளி மற்றும் வீட்டுக்குள்ளேயே இருத்தல் ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. இதனை அடுத்து கோடிக்கணக்கான மக்கள் கடந்த இரண்டு மாதங்களாக வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தனர் என்பதும் தற்போது தான் ஓரளவுக்கு வெளியே வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக திரையுலக பிரபலங்கள் பலரும் கடந்த இரண்டு மாதங்களாக வீட்டை விட்டு வெளியேறவில்லை. குறிப்பாக மாஸ் நடிகர்கள் கொரோனாவின் தாக்கம் முழுமையாக முடிந்த பின்னரே வெளியே வருவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தல அஜீத் மற்றும் அவரது மனைவி ஷாலினி ஆகியோர் மாஸ்க் அணிந்து வரும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. ’வலிமை’ படத்தின் அப்டேட் எதுவும் இல்லாமல் அதிருப்தியில் இருக்கும் தல அஜித்தின் ரசிகர்கள் தற்போது இந்த வீடியோவை வைரலாக்கியும், சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆக்கியும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Another #ThalaAjith Latest Video #Valimai pic.twitter.com/guM1oyKVHA
— THALA AJITH (@ThalaAjith_Page) May 22, 2020
#ThalaAjith with Shalini Mam Latest Video
— THALA AJITH (@ThalaAjith_Page) May 22, 2020
How Many Can Spot #ThalaAjith in this video by watching first time itself #Valimai pic.twitter.com/pPsrwNQXvq