உலகத்தில் பல நாடுகளில் வாழும் மக்களின் வாழ்க்கை எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதை கணிப்பவர்களே தீர்க்கத்தரசிகள். அப்படி தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருப்பவரே பாபா வாங்கா.

இவருடைய பல கணிப்புகள் உண்மையாகியுள்ளதால் எந்தவொரு அனர்த்தம் நடந்தாலும் அது பாபா வாங்கா கணிப்பில் கூறப்பட்டுள்ளதா என நிபுணர்கள் பரிசீலனை செய்வார்கள்.

அந்த வகையில், நடப்பாண்டான 2025 ஆம் ஆண்டில் பல திடுக்கிடும் கணிப்புகளை பாபா வாங்கா கூறியிருக்கிறார். அதில் சில நடந்தன.

பாபா வாங்கா கணிப்பின் படி, இன்னும் 3 மாதங்களில் முடியப்போகும் 2025 ஆம் ஆண்டில் சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பல வெற்றிகளை பெற்று நிதி நிலையில் முன்னேற்றம் காணும் ராசிகள் யார் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.      

கடைசி 3 மாதத்தில் இவர்களுக்கு அதிர்ஷ்டம்.. பாபா வாங்கா கணிப்பில் சிக்கிய தகவல் | Baba Vanga Predictions 2025 Last 3 Months

ரிஷபம் பாபா வாங்கா கூறியது போன்று ரிஷப ராசியில் பிறந்தவர்கள் கடைசி 3 மாதங்களில் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள். சூரியனின் ஆசியை பெற்று நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தியை அறிவார்கள். கடின உழைப்பால் வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு செல்வார்கள். சுய மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் தீராத பிரச்சினைகள் அனைத்தும் நிறைவிற்கு வரும்.  
கன்னி பாபா வாங்காவில் கூறியது போன்று கன்னி ராசியில் பிறந்தவர்கள் இந்த கடைசி 3 மாதங்களில் சனி பகவானின் அருள் பெற்று சிறந்து விளங்குவார்கள். பண பிரச்சினைகள் தீரும். தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல வாய்ப்புக்கள் வீடு தேடி வரும். முன்னேற்றம் காண்பதால் புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு வரும். கடின உழைப்பு அவசியம். உங்கள் துணை உங்களுக்க முழுமையான ஒத்துழைப்பு கொடுப்பார்கள். 
கும்பம் கும்ப ராசியில் பிறந்தவர்கள் கடைசி 3 மாதங்களில் அற்புதமான பலன்களை பெற்றுக் கொள்வார்கள். இவர்களுக்கு பல வழிகளில் வெற்றி கிடைக்கும். பணிச் செய்யும் இடங்களில் பாபா வாங்கா கூறியது போனது பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் கிடைக்கும். மொத்தத்தில் கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.