ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலையில் ஏற்படுகின்ற மாற்றங்கள் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான ராசிபலன் கணிப்பின் பிரகாரம் கிரக நிலைகளின் ராசி மாற்றங்கள் மற்றும் நட்சத்திரமாற்றங்களின் அடிப்பமையில் குறிப்பிட்ட சில ராசியினரின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கப்போகின்றது.
அப்படி துன்பங்கள், பிரச்சினைகள் நீங்கி திருமணபந்தத்தில் அதிர்ஷ்டகரமான சாதக நன்மைகளை பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமண வாழ்வில் நீண்ட காலமாக நிலவிந்த கருத்து வேறுப்பாடுகள் நீங்கி இணக்கமான சூழல் உருவாகும்.
2025 ஆம் ஆண்டுக்கான திருமணக் கணிப்புகளின் அடிப்படையில், சுக்கிரன் திருமண நல்லிணக்கத்தை கொடுப்பதால் ஆண்டின் தொடக்கத்திலேயே திருமண வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் நிகழ்வதை அவதானிக்க முடியும்.
நிதிநிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதால் வாழ்க்கை துணைக்கு விரும்பிய பொருட்களை பரிசளித்து மகிழ்வீர்கள். திரமண உறவில் நெருக்கம் அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்களின் திருமண வாழ்கையில் 2025 ஆம் ஆண்டில் பல்வேறு சாதக மாற்றங்கள் நிகழப்போகின்றது.
சிம்ம ராசியினருக்கு சுக்கிரன் ஆசியால் அழகும் பொழிவும் அதிகரிக்கும்.அதனால் திருமண வாழ்க்கையில் உற்சாகமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். உறவினர்களுக்கு மத்தியில் ஒற்றுமை அதிகரிக்கும்.
அடுத்த ஆண்டில் இடம்பெரும் குரு பெயர்ச்சி சிம்ம ராசியினருக்கு காதலை மேம்படுத்துவதால் ஜூன் மாதத்தில் திருமண வாழ்வில் உறவில் ஆழம் அதிகரிக்கும். 2025 ஆம் ஆண்டு முழுவதும் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி அதிகரிக்கும்.
துலாம்
2025 ஆம் ஆண்டில் வியாழன் பெயர்ச்சி திரமண உறவில் தெளிவையும் இணக்கத்தையும் ஏற்படுத்தும்.
கணவன் மனைவிக்கு இடையில் காதல் அதிகரிக்கும். நீண்ட நாள் இருந்து வந்த கருத்து வேறுப்பாடுகள் குறித்து மனம்விட்டு பேசுவதற்கான வாய்ப்பு அமையும்.
ஆண்டில் நடுப்படுகுதியில் பொறுமை இழக்கும் சூழல் உருவாகும் ஆனால் சுக்கிரன் பெயர்ச்சி மீண்டும் காதல் உணர்வை அதிரித்து முறன்பாடுகளுக்கு தீர்வு கொடுத்துவிடுவார்.
மொத்தத்தில் 2025 ஆம் ஆண்டு முழுவதும் திருமண வாழ்க்கை அமோகமாக இருக்கும்.