பிரித்தானியாவில் கோமாவில் உள்ள இளம் பெண்ணை கருணைக்கொலை செய்ய நீதிபதி அனுமதியளித்துள்ளார்.
கொரோனா, அடிப்படை உடல்நிலை குறைப்பாடுடன் கோமாவில் உள்ள இளம் பெண்ணை கருணைக்கொலை செய்ய நீதிபதி Hayden அனுமதியளித்துள்ளார்.
Addison's நோயால் பாதிக்கப்பட்டுள்ள 30 வயதான நோயாளி பெண்ணிற்கு, ஒரு மாதத்திற்கு முன் 32 வார கார்பமாக இருந்தபோது கொரோனா உறுதியானது, இதனதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு சிசேரியன் மூலம் ஆண் குழுந்தை பிறந்துள்ளது, ஏற்கனவே அவருக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைதொடர்ந்து கடந்த ஒரு மாதமாக அப்பெண் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் உயிர் காக்கும் மருத்துவ உபரணங்கள் உதவியுடன் கோமாவிலே இருந்துள்ளார்.
அவசர வழக்காக காணொளி மூலம் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி Hayden, அப்பெண் மீண்டு வருவதற்கான வாய்ப்பே இல்லை என்பதால், Leicester NHS அறக்கட்டளையின் பல்கலைக்கழக மருத்துவமனை மருத்துவர்கள் பெண்ணின் உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சையை சட்டப்பூர்வமாக முடிவுக்கு கொண்டு வரலாம் என தீர்ப்பளித்துள்ளார்.
நீதிபதியின் தீர்ப்புக்கு பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முஸ்லிம்களான அவர்கள், கடவுள் மட்டுமே உயிரை எடுக்க முடியும் என நம்புவதாக கூறினார்.
பெண்ணின் சி.டி ஸ்கேன் அடிப்படையில் சாதாரண நுரையீரல் செயல்பாடு இல்லை, இது தவிர, அவரது கணையம் செயல்படுவதை நிறுத்திவிட்டது என்று மருத்துவர்கள் நீதிபதியிடம் தெரிவித்தனர்.
இந்த குடும்பம் அதிசயத்தை எதிர்பார்க்கிறது, அந்த பெண்ணின் நிலைமை கிட்டத்தட்ட சொல்ல முடியாத சோகத்தின் சோகம் என்று நீதிபதி கூறினார்.
எங்கள் நோக்கம், பெண்ணின் வாழ்க்கையை குறைப்பது அல்ல. அவரது மரணம் நீடிப்பதைத் தவிர்ப்பது தான் என்று நீதிபதி கூறினார்.
மேலும், அவரது குடும்பத்தினர் பார்த்து்ககொள்ள முடியும் என்றால் நோயாளிக்கு palliative care சிகிச்சை திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என நீதிபதி கூறினார்.