மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி விபத்துக்கள் காரணமாக தினமும் ஐந்து முதல் ஆறு உயிர்கள் வரை இழக்கப்படுவதாக பொலிஸ் ஊடகதொடர்பாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறுகிறார்.

இதனால் மோட்டார் சைக்கிள் ஆய்வு நடவடிக்கை இன்று முதல் இலங்கை முழுவதும் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

சோதனை செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களின் தரம் மற்றும் அவற்றின் இயங்கும் நிலை ஆராயப்படும்.

இலங்கையில் பல்வேறு பகுதிகளில் நேற்று ஏற்பட்ட வீதி விபத்துக்களால் மேலும் 8 பேர் உயிரிழந்தனர்.

நாட்டில் தற்போது சுமார் 8.3 மில்லியன் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவற்றில் 56% மோட்டார் சைக்கிள்கள்.

பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கையில் 16% ஆகும் என்றார்.