பொதுவாக சமையலறையில் உள்ள பொருட்களில் சமையலை எளிதாக்கும் பொருள் தான் பிரஷர் குக்கர்.

இதில், வழக்கமான உணவை சமைப்பது முதல் பேக்கிங் வரை செய்ய முடியும்.

இதன் பயன்கள் ஏராளமாக இருந்தாலும், பிரஷர் குக்கரில் சமைக்கக் கூடாத உணவுகள் என சில உள்ளன.

மறந்தும் கூட குக்கர் பக்கம் இந்த பொருட்களை கொண்டு போகாதீங்க! விளைவு பயங்கரமாக இருக்குமாம் | Foods You Should Never Cook In A Pressure Cooker

இவை தெரியாமல் சமைக்கும் பொழுது உணவின் சுவை, அமைப்பு ஆகியவற்றில் மாற்றம் ஏற்படும்.

அந்த வகையில், பிரஷர் குக்கரில் சமைக்ககூடாத உணவுகள் என்னென்ன என்பது பற்றி தொடர்ந்து பார்க்கலாம்.

1. பிரஷர் குக்கர் என்பது உணவை நீராவியில் சமைக்கும் அமைப்பில் உருவாக்கப்பட்டது. இதில் வறுத்த உணவுகளை சமைக்க முடியாது. மீறினால் சுவை மற்றும் வடிவத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.

மறந்தும் கூட குக்கர் பக்கம் இந்த பொருட்களை கொண்டு போகாதீங்க! விளைவு பயங்கரமாக இருக்குமாம் | Foods You Should Never Cook In A Pressure Cooker

2. கடலுணவுகளை குக்கரில் சமைக்கக் கூடாது. எளிதாக வெந்து விடும். குக்கரில் வைக்கும் பொழுது உணவு குலைத்து போவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது.

3. பாஸ்தாவை விரைவாக சமைக்கலாம். இதனை குக்கரில் வைப்பதால் சுவை மாறலாம். ஆகவே பாரம்பரிய கொதித்தல் முறையில் சமைப்பது சிறந்தது.

மறந்தும் கூட குக்கர் பக்கம் இந்த பொருட்களை கொண்டு போகாதீங்க! விளைவு பயங்கரமாக இருக்குமாம் | Foods You Should Never Cook In A Pressure Cooker

4. பால் சார்ந்த சுவையான உணவுகளை குக்கரில் சமைப்பதை தவிர்க்கவும். இதனை மீறும் பட்சத்தில் உணவின் உண்மையான வடிவம் மாறிப்போகும்.

5. பிரஷர் குக்கரில் தடிமனான கிரீம் போன்ற சூப்களை சமைப்பதை தவிர்க்கவும். ஏனெனில் குக்கரினால் கொடுக்கும் அழுத்தத்தினால் சுவையில் மாற்றம் ஏற்படலாம்.

மறந்தும் கூட குக்கர் பக்கம் இந்த பொருட்களை கொண்டு போகாதீங்க! விளைவு பயங்கரமாக இருக்குமாம் | Foods You Should Never Cook In A Pressure Cooker

6. கேக், பிஸ்கட் போன்ற உணவுகளை பிரஷர் குக்கரில் செய்ய முனைந்தால் நிச்சயம் சுவையில் மாற்றம் ஏற்படும். பேக்கிங் வேலைகளுக்காக வேறு ஒரு அடுப்பைப் பயன்படுத்துவது நல்லது.

7. பழங்களுக்கு அழுத்தம் கொடுத்து சமைப்பது அவ்வளவு சரியாக வராது. இதனை வறுத்தல் அல்லது பிற சமையல் முறைகளை பயன்படுத்தி சமைக்கலாம். இப்படி செய்தால் மாத்திரம் தான் சுவை, ஆரோக்கியம் இரண்டையும் ஒரே நேரத்தில் பெற முடியும்.-