கேரள மாநிலம் பாலக் காடு குனிசேரி பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெசீர். இவரது மனைவி ரம்லா. இவர்களது மகன் கள் ரின்சாது(வயது12), ஜின்சாது(7), ரிபாஸ்(3).

சிறுவர்கள் 3பேரும் நேற்று தங்களின் வீட்டின் அருகே உள்ள மா மரத்தில் மாங்காய்கள் பறித்தனர். பறித்த மாங்காய்களை கழுவுவதற்காக அந்த பகுதியில் இருக்கும் ஒரு குளத்திற்கு சென்றனர். சிறுவன் ரிபாஸ் குளத்து தண்ணீரில் மாங்காய்களை கழுவிக்கொண்டிருந்தான்.

அப்போது திடீரென அவன் குளத்திற்குள் தவறி விழுந்துவிட்டான். அவன் தண்ணீரில் தத்தளித்தான்.சிறிது நேரத்தில் குளத்து தண்ணீரில் மூழ்கினான். இதனைப்பார்த்த அவனது மற்ற சகோதரர்களான ரின்சாது, ஜின்சாது ஆகிய இருவரும் அடுத்தடுத்து குளத்திற்குள் குதித்து ரிபாசை காப்பாற்ற முயன் றனர்.

ஆனால் அவர்களும் குளத்திற்குள் மூழ்கினர். இதனை அந்த பகுதியில் குளித்துக்கொண்டிருந்த மற்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து குளத் தில் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது குளத்தில் மூழ்கிய 3சிறுவர்களையும் அவர்கள் பிணமாக மீட்டனர். சிறுவர் களின் உடலை பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

பின்பு 3 பேரின் உடல்களும் பிரேத பரி சோதனைக்காக பாலக் காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத் தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.