ஆட்டு ஈரலில் அதிக சத்துக்கள் இருக்கிறது. இதை மிகவும் அருமையான சுவையில் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

ஆட்டு ஈரல் ப்ரை
மட்டனில் நாம் சாப்பிடாத உறுப்பு இல்லை. அதிலும் மட்டன் ஈரல் என்றால் மிகவும் சுவையாக இருகும்.
மட்டன் வாய்க்கு சுவையாக இருப்பது மட்டுமல்லாமல் இது உடலுக்கு அவ்வளவு ஆரோக்கியத்தை அள்ளி தருகிறது.
எனவே இந்த பதிவில் கூறப்பட்ட ரெசிபியை வைத்து மட்டன் ப்ரை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- ஆட்டு ஈரல் – 250 கிராம்
- வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் – 2
- சீரகம் – 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிதளவு
- மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
- மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்
- மிளகுத்தூள் – ½ டீஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
- கொத்தமல்லித்தழை – சிறிதளவு

செய்முறை
- ஆட்டு ஈரலை நன்றாக சுத்தம் செய்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- ஊறவைத்த ஈரலை சேர்த்து மெதுவாக கிளறி குறைந்த தீயில் வேகவிடவும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை மூடி வைத்து சமைக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் தெளிக்கலாம்.
- ஈரல் நன்றாக வெந்ததும் மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லித்தழை தூவி கிளறி இறக்கவும். சூடாக சாதம், சப்பாத்தி அல்லது ரொட்டியுடன் பரிமாறவும்.
