தற்காலத்தில் சூழல் மாசு மற்றும் தவறான உணவுப்பழக்கம், அதிகரித்த வேலைபளு, மன அழுத்தம் ஆகியவற்றின் காரணமாக கூந்தல் உதிர்வு மற்றும் கூந்தல் வறட்சி போன்ற பிரச்சினைகள் அதிகரித்துவிட்டது.
கூந்தல் தொடர்பான ஒட்டுமொத்த பிரச்சினைகளுக்கும். வீட்டில் உள்ள ஒரு பொருளை வைத்த முடிவுக்கட்டி விடலாம். அது தான் வெந்தயம்.
வெந்தயம் கூந்தல் தொடர்பான ஏறாளமான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தரும் வெந்தியத்தில் ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ, சி மற்றும் கே, பொட்டாசியம், இரும்பு, ஆகிய ஊட்டச்சத்துகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் நிறைந்துள்ளது.
கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்தும் வெந்தயம் வெந்தயம் முடி உதிர்வை தடுக்கவும் கூந்தலை அடர்த்தியாக்கவும் பளபளப்பாக்கவும் பெரிதும் துணைப்புரிகின்றது.
வெந்தயத்தை பயன்படுத்தி எவ்வாறு கூந்தல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வை பெறலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
பாத்திரத்தில் 2 ஸ்பூன் தயிர் மற்றும் 1 ஸ்பூன் வெந்தயத்தை அரைத்து அதனுடன் கலந்துக்கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு தே.கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து இந்த ஹேர் மாஸ்க்கை தலையில் தடவி 30 நிமிடங்களின் நன்றா உலர விட்டு பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவினால் கூந்தல் பட்டு போல் மென்மையாகிவிடும்.
வெந்தத்தை எலுமிச்சை சாறு கலந்து அரைத்து, கூந்தலில் தடவி 15 தொடக்கம் 20 நிமிடம் உலரவிட்டு வெதுவெதுப்பாக தண்ணீரில் கழுவினால் பொடுகு தொல்லை நீங்குவதுடன் கூந்தல் மினுமினுப்புடன் இருக்கும்.
இரண்டு தே.கரண்டி வெந்தயத்தை அரை கப் தேங்காய் எண்ணெயுடன் கலந்து நன்றாக கொதிக்க வைத்து இந்த எண்ணெயை முடியின் வேர் முதல் நுனி வரை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தி வந்தால் கூந்தல் அடர்த்தியாகவும் கருமையாகவும் வளர ஆரம்பிக்கும்.
இரண்டு தே.கரண்டி வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில், அதை அரைத்து பேஸ்ட் செய்து கூந்தலில் தடவி 30 நிமிடம் உலரவிட்டு கூந்தலை வெதுவெதுப்பான நீரில் கழுவினால் கூந்தல் உதிர்வது குறைய ஆரம்பிக்கும்.
இதனை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தினால் கூந்தல் உதிர்வு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைப்பதுடன் கூந்தல் கருமையாகவும் இயற்கையான பளபளப்புடனும் இருக்கும். இது நரை முடி பிரச்சினைக்கும் தீர்வு கொடுக்கும்.