திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் கே.டி.சந்திரசேரகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

திருப்பூர் சந்தைப்பேட்டை துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே சந்தைப்பேட்டை துணை மின்நிலையத்திற்குட்பட்ட செந்தூரன் கார்டன், கிருஷ்ணாநகர் கிழக்கு, மற்றும் மேற்கு அமராவதி நகர், கல்லாங்காடு 1 முதல் 7 வீதிகள், வாய்க்கால்மேடு கே.எம்.சிவசுப்பிரமணியம் நகர், முத்துநகர், அய்யப்பன்கோவில் வீதி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் தடைசெய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.