அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றார்.
தற்போதைய அதிபரான டொனால்டு டிரம்ப் மற்றும் துணை அதிபரான மைக் பென்ஸ் தோல்வியடைந்தனர்.
அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன், துணை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கமலா ஹாரிஸ் இன்று பதவியேற்க உள்ளனர்.
அமெரிக்க பாராளுமன்றத்தில் இந்திய நேரப்படி இரவு 10 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. பதவியேற்பு விழாவை தொடர்ந்து ஜோ பைடன் அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளைமாளிகையில் நாளை குடியேற உள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் அலுவலகம் மற்றும் வீடாக செயல்பட்டு வந்த வெள்ளைமாளிகையில் இருந்து தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று வெளியேறினார்.