நாட்டில் மேலும் 349 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் மொத்த கொரோனா பாதிப்பு 57 ஆயிரத்து 936ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை,  மொத்தமாக 49ஆயிரத்து 261 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர் என்பதுடன் இன்னும் எட்டாயிரத்து 395 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அத்துடன், இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 280 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.