கொசு தொல்லைக்கு நிரந்தர தீர்வு வேண்டுமெனில் வீடு துடைக்கும் போது சில பொருட்களை தண்ணீரில் சேர்த்து துடைத்தால் நல்ல பலனை காணலாம்.
பொதுவாக வீடு துடைக்கும் அழுக்கு போவதற்கு சில பொருட்களை தண்ணீரில் சேர்த்து துடைப்பது வழக்கம். அவ்வாறு செய்கையில், கொசு தொல்லையிலிருந்து விடுபட, சில பொருட்களை தண்ணீரில் கலந்து வீட்டை துடைத்தால் போதுமாம்.
வினிகரை தண்ணீரில் கலந்து வீட்டை துடைக்கும் போது பூச்சிகள் மற்றும் கொசு பிரச்சினைகள் இல்லாமல், தரையும் பளபளப்பாகவே இருக்கும்.
அத்தியாவசிய லாவெண்டர் எண்ணெய், மிளகுக்கீரை எண்ணெய் போன்றவற்றை தண்ணீரில் கலந்து துடைத்தால் பூச்சி, கொசு தொல்லை இருக்கவே இருக்காது.
தண்ணீரில் இலவங்கப்பட்டையை போட்டு கொதிக்க வைத்து வீட்டை துடைத்தால் வீட்டில் அழுக்குகள் போவதுடன், ஈக்கள் மற்றும் கொசுக்களில் இருந்து தப்பிக்கலாம்.
பாத்திரம் கழுவும் சோப்பை தண்ணீரில் கலந்து வீட்டை துடைத்தாலும் குறித்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். சோப்பு தண்ணீரை கொண்டு துடைத்த பின்பு சாதாரண தண்ணீரை வைத்தும் துடைக்க வேண்டும்.