பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஞாயிறு அன்று தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்ட ஐந்தே நாட்களில் அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாலிவுட் பிரமுகர்கள் கொடுத்த டார்ச்சரால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் தான் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டார் என்ற ரீதியில் பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இதில் இருக்கும் உண்மைகளை வெளிக்கொண்டு வரப் போகிறேன் என பிரபல இயக்குனர் ஷாமிக் மெளலிக் (Shamik Maulik) என்பவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

’கொலையா? தற்கொலையா? என்று இந்த படத்தின் டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படம் உண்மையில் சுஷாந்த் சிங்கின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் அல்ல என்றும் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் அவரது தற்கொலைக்கு காரணமானவர்கள் யார் யார் என்பதை தோலுரிக்கும் வகையிலும் இந்த திரைப்படம் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தை விஜய்சேகர் குப்தாவுடன் இணைந்து இயக்கவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே தற்கொலை செய்து கொண்ட ஒரு நட்சத்திரத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்காக முடிவு செய்து வைத்த டைட்டில் தான் ‘கொலையா? தற்கொலையா? என்றும், ஆனால் தற்போது சுஷாந்த் சிங் திரைப்படத்திற்கு இந்த டைட்டிலை பயன்படுத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்

பிரபல நடிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட ஐந்தே நாட்களில் அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்த அறிவிப்பு பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது