கெஸ்பேவ நகர சபை உறுப்பினர் ஒருவர் உட்பட 32 பேருக்கு கொவிட 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்றாளர்களுக்கு இடையில் நகர சபை உறுப்பினர் ஒருவர், போகுந்தர பொருளாதார மையத்தின் 20 ஊழியர்கள் மற்றும் பிரபல விற்பனை நிலையமொன்றின் 11 ஊழியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக கெஸ்பேவ நகர சபை மற்றும் போகுந்தர பொருளாதார மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்த தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இந்திக்க எல்லாவல தெரிவித்தார்.