தமிழில் சில படங்களிலும் சீரியல்களிலும் நடித்துள்ள நடிகை மாலதி. கன்னட திரையுலகில் பல படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க சென்றால் கூட அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண வேண்டும் என தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் டார்ச்சர் செய்து வருகின்றனர்.

இதனால், சினிமாவில் நடிக்கவே வேண்டாம் என முடிவு செய்து விட்டேன். ஈஸியாக எந்தவொரு பிரச்சனையும் பண்ணாமல் பணத்திற்காக படுக்கைக்கு வருவார்கள் என தப்புக் கணக்கு போட்டு ஆட்டம் ஆடி வருகின்றனர். அ ட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு சம்மதிக்கவில்லை என்றால் துணை நடிகை கால் மீது கால் போட்டு உட்கார்ந்தால் கூட குத்தம் என்பார்கள்.

செட்டில் மதிப்பது கிடையாது. ஆனால், அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யும் துணை நடிகைகளுக்கு பிக்கப், டிராப், கேரவன் வசதி, எக்ஸ்ட்ரா மணி, மேடம் என மரியாதை என ஏகப்பட்ட சலுகைகளை கொடுக்கின்றனர்.

சினிமாவில் நடக்கும் இதுபோன்ற அசிங்கத்தை எந்தவொரு முன்னணி நடிகர்களும் தட்டிக் கேட்பதோ அல்லது தடுப்பதோ கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.  

அம்மாவா நடிக்க கூட அட்ஜெஸ்ட்மெண்ட் தான்; அவ்வளவு வசதி - நடிகை மாலதி பகீர்! | Supporting Actress Malathi About Adjustment