கடந்த 2011 ஆம் இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் இலங்கை அணி பணத்திற்காக விற்கப்பட்டது என அப்போதைய விளையாட்டு அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளமை தொடர்பில் அரசியல் வாதிகள் தங்களது கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் கணக்கில் தன்னுடைய கருத்துக்களை பதிவேற்றியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு பாரதூரமானது எனவும், நாம் அனைவரும் விரும்பும் கிரிக்கட் விளையாட்டிற்கும் பெரும் அவமானம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆகையினால் குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச கிரிக்கட் சபை மற்றும் விளையாட்டு துறை அமைச்சரிடம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.