கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், ஆஸ்திரேலியாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 98 பேர், மெல்பர்ன் நகரிலிருந்து ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானம் மூலம் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அவர்கள், ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 605 எனும் விசேட விமானம் மூலம் இன்று அதிகாலை 5.10 மணிக்கு இலங்கை வந்தடைந்துள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர், ஆஸ்திரேலியாவில் உயர் கல்வியைத் தொடர்வதற்காக புறப்பட்டுச் சென்ற மாணவர் குழுவினர் ஆவர்.
இவர்களுக்கு விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை, இவர்கள் விமான நிலையத்துக்கு அருகிலுள்ள ஹோட்டல்களில் தற்காலிகமாகத் தங்குவதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.