காலை வெறும் வயிற்றில் தேநீர் அருந்துவதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பொதுவாகவே காலையில் எழுந்ததும் சிலருக்கு தேநீர் பருகி ஆக வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அவ்வாறு தேநீர் பருகவில்லை என்றால் அன்றைய தினத்தில் வேலையும் சரியாக செய்யமுடியாமல் இருக்கின்றனர். 

வெறும் வயிற்றில் டீ குடிக்கிறீங்களா? ஆபத்தை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Morning Empty Stomach Drinking Tea In Side Effect 

இவ்வாறு காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது. அவை என்னென்ன பிரச்சனைகள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். 

 

வெறும் வயிற்றில் தேநீர்

தேநீரில் காஃபின் என்ற சேர்மங்கள் உள்ள நிலையில், சிலருக்கு வயிறு அமிலத்தன்மையுடனும், செரிமானத்தையும் பாதிக்கும். குறிப்பாக இவ்வாறான பிரச்சனை உள்ளவர்கள் காலையில் தேநீர் பருகுவதை தவிர்க்கவும்.

நெஞ்செரிச்சல், குமட்டல் மற்றும் வயிற்றுக் கோளாறு பிரச்சனையும் ஏற்படலாம். தேநீர் பருகும் அளவு, வீரியம் இவற்றினைப் பொருத்து பிரச்சனைகள் ஏற்படுமாம். 

வெறும் வயிற்றில் டீ குடிக்கிறீங்களா? ஆபத்தை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Morning Empty Stomach Drinking Tea In Side Effect

குறைவான அளவு தேநீர் அருந்துவது குடலை நேரடியாக பாதிக்கும் என்று நிரூபிக்கப்படவில்லை. ஆனால் தேநீரில் உள்ள காஃபின் சிலரது குடல் இயக்கத்தை தூண்டி, தேநீர் அருந்தியதும் மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். 

வெறும் வயிற்றில் டீ குடிக்கிறீங்களா? ஆபத்தை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Morning Empty Stomach Drinking Tea In Side Effect

எளிதில் செரிமானம் ஆகக்கூடிய சிலருக்கு வயிறு பிடிப்பு மற்றும் வயிற்று போக்கு ஏற்படலாம். மேலும் தேநீரில் உள்ள டானின்கள் உணவிலிருந்து இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதை குறைக்குமாம். ஆகவே இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் தேநீர் அருந்துவதை தவிர்க்கவும். 

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் பருகுவதை வழக்கமாக வைக்கவும். பின்பு காலை உணவை சாப்பிட்ட பின்பு தேநீர் அருந்தவும். அதிகப்படியான காஃபின் சேர்ப்பதை தவிர்க்கவும்.