பொதுவாக இந்தியர்களின் கலாச்சாரம் படி ரசம் அவர்களின் உணவில் கட்டாயம் இருக்கும்.

மற்ற குழம்புகளை விட ரசத்தை குடிப்பதால் ஏகப்பட்ட மருத்துவ பலன்கள் உள்ளன.

அப்படியாயின், பீட்ரூட் கிழங்கை வைத்து குழம்பு, கூட்டு, சம்பார், பொரியல், வறுவல் போன்ற வகைகளில் சமைத்து சாப்பிட்டிருப்போம். ஆனால் பீட்ரூட் கிழங்கை வைத்து ரசம் செய்யும் ரெசிபி கொஞ்சம் புதிதாக உள்ளது.

சீரியல் நடிகை ப்ரீத்தி சஞ்சீவ் பீட்ரூட் கிழங்கை வைத்து நிகழ்ச்சியொன்றில் ரசம் செய்து காட்டியுள்ளார்.

அந்த வகையில், பீட்ரூட் கிழங்கை வைத்து சீரியல் நடிகை எப்படி ரசம் செய்தார் என்பதை பதிவில் பார்க்கலாம். 

காரசாரமான பீட்ரூட் ரசம்: ப்ரீத்தி சஞ்சீவின் ரெசிபி | Beetroot Rasam Recipe In Tamil

தேவையான பொருட்கள்

  • பீட்ரூட் - 1
  • புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
  • தக்காளி - 1
  • இஞ்சி - சிறிய துண்டு
  • பூண்டு - 3 பற்கள்
  • மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
  • சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - கால்
  • தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு
  • பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
  • கொத்தமல்லி தழை - சிறிதளவு 

 செய்முறை

முதலில், பீட்ரூட் கிழங்கை எடுத்து தோல் நீக்கி விட்டு, சிறிய சிறிய துண்டுகளாக்கி விட்டவும்.

அதன் பின்னர், தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்றாக வேக வைத்து விட்டு அதிலிருக்கும் தண்ணீரை மாத்திரம் தனியாக எடுக்கவும். கிழங்கு இருந்தால் அரைத்து சேர்க்கலாம்.

அடுத்து, புளியை வெதுவெதுப்பான நீரில் கரைத்து தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும். ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும்.

காரசாரமான பீட்ரூட் ரசம்: ப்ரீத்தி சஞ்சீவின் ரெசிபி | Beetroot Rasam Recipe In Tamil

அதனுடன் கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு ஆகியன சேர்த்து வதக்கவும்.

கறிவேப்பிலை வதங்கியதும் அரைத்து தயார் நிலையில் இருக்கும் பீட்ரூட் தண்ணீர், தக்காளி மிளகுத்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகிய பொருட்களை ஒன்றாக போட்டு கொதிக்க வைக்கவும்.

தண்ணீர் போதாமல் இருந்தால் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். கடைசியாக ரசம் கொதித்து வரும் பொழுது பெருங்காயத்தூள் மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

காரசாரமான பீட்ரூட் ரசத்தை அப்படியே குடிக்கலாம் அல்லது சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

காரசாரமான பீட்ரூட் ரசம்: ப்ரீத்தி சஞ்சீவின் ரெசிபி | Beetroot Rasam Recipe In Tamil

 

பலன்கள்

  • பீட்ரூட் ரசம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். இதனால் குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்கலாம்.
  • சர்க்கரை நோயால் அவஸ்தைப்படுபவர்கள் பீட்ரூட் ரசம் செய்து குடிக்கலாம். நோயை கட்டுப்படுத்த உதவியாக இருக்கும்.
  • இதய ஆரோக்கியம் குறைவாக இருப்பவர்கள் பீட்ரூட் ரசம் அடிக்கடி குடிக்கலாம். இது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும்.
  • உடலின் வீக்கம் இருப்பவர்கள் பீட்ரூட் ரசம் எடுத்துக் கொள்ளலாம். 

காரசாரமான பீட்ரூட் ரசம்: ப்ரீத்தி சஞ்சீவின் ரெசிபி | Beetroot Rasam Recipe In Tamil