விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருந்தாலும் விலங்குகள் நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறியும் சக்தி கொண்டவை. இதனை இவைகள் ஏதாவது ஒரு வழியில் நமக்கு அறிமுகப்படுத்தும் இப்படித்தான் பறவைகளும்.

காகங்கள் பறவைகளில் ஒன்றாகும். இது சுற்று சூழலை பாதுகாத்து வரும் ஒரு பறவை. இந்து இந்து மதத்தில் சனிபகவானின் வாகனமாக பார்க்கப்படுகின்றது. இந்த பறவைக்கு ஜோதிடப்படி பல சாஸ்திர வாஸ்த்துக்கள் உள்ளன. அந்த வகையில் காகம் நமது தலையில் தட்டினால் அது மிகவும் அபச குணமாக பார்க்கப்படுகிறது.

இதில் உள்ள உண்மை என்ன. வேத சாஸ்திரம் இதற்கு என்ன கூறுகின்றது ?அப்படி காகம் நமது தலையில் தட்டினால் நாம் செய்ய வேண்டிய விஷயம் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

காகம் நமது தலையில் தட்டுவது மிகவும் சாதாரண விஷயம். குறிப்பாக நமது முன்னோர்களை நாம் வணங்க மறந்தாலோ அல்லது நம் முன்னோர்களுக்கு உரிய காலத்தில் திதி கொடுக்க மறந்தாலோ அவர்கள் நம்மை தேடி காகத்தின் வடிவத்தில் வரலாம்.

காகம் தலையில் தட்டினால் என்ன பலன்? வேத சாஸ்திர உண்மை தெரிஞசுக்கோங்க | Crow Hits You On The Head Is It Bad Luck Signs

காகம் தலையில் தட்டினாலே காகத்தையும் சனீஸ்வரரையும் தொடர்ப்பு படுத்தி பார்க்க வேண்டும் என்பது கிடையாது.  காகம் ஒன்று தண்ணீர் குடிப்பதைப் நாம் பார்த்தால் அது புண்ணியமாக பார்க்கப்படுகின்றது. சாஸ்திரங்களின்படிஏதாவது  ஒரு சுபநிகழ்ச்சி நம்மை தேடி வரும். இது எப்பவும் நடைபெறாது. இதனாலேயே இது நன்மையாக கருதப்படுகின்றது.

இதனால் உங்களுக்கு ஏதாவது வழியில் இருந்து உங்கள் தேவைக்கு பணம் வந்து சேரும். காலையில் வீட்டின் கிழக்கில் காகம் கரைவதை பார்த்தால், அதுவும் நல்லது. காகம் சாப்பிடுவதைப் பார்ப்பது - ஒரு நபர் காகத்திற்கு உணவளித்தால், காகம் அவரது கண்களுக்கு முன்பாக சாப்பிட ஆரம்பித்தால் இது ஒரு நல்ல அறிகுறியாக கருதப்படுகின்றது.

இந்த காரணத்தினால் மனதின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. மேலும் ஒரு முக்கிய வேலைக்கு செல்லும் போது காகம் தென்பட்டால் அதுவும் நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. இந்தக் காட்சியைக் கண்டால் நமது நீண்ட நாள் வேலைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

காகம் தலையில் தட்டினால் என்ன பலன்? வேத சாஸ்திர உண்மை தெரிஞசுக்கோங்க | Crow Hits You On The Head Is It Bad Luck Signsஒரு காகம் உங்கள் இருப்பிடத்தில் ஒரு ரொட்டித் துண்டை அல்லது அதன் வாயில் வைக்கோல் போன்ற ஒன்றைக் கொண்டு வந்தால், அது மிகவும் நல்ல அறிகுறியாகக் கருதப்படுகிறது.

இது வீட்டின் உரிமையாளரின் அதிர்ஷ்டத்திலும் பெரும் செல்வத்திலும் நல்ல மாற்றங்களைக் பெறப்போகின்றார் என்பதை குறிக்கிறது. நண்பகல் வேளையில் வீட்டின் வடக்கே காக்கைகளை அழைப்பது மங்களகரமானது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அதேபோல், காலையில் வீட்டின் கிழக்கில் காகம் கூப்பிடுவதைக் கண்டால் அதுவும் நல்ல அறிகுறி. நீங்கள் வேலை நிமித்தமோ அல்லது எங்காவது சுற்றுலா சென்றாலோ, உங்கள் வீட்டின் தாழ்வாரத்தில் காகங்கள் கூவுவதைப் பார்த்தால், அதுவும் நல்ல அறிகுறியாகக் கருதப்படுகிறது. இதனால் பயணம் நினைத்ததை விட நன்மையாக இருக்கும்.

காகம் தலையில் தட்டினால் என்ன பலன்? வேத சாஸ்திர உண்மை தெரிஞசுக்கோங்க | Crow Hits You On The Head Is It Bad Luck Signs

 

காகம் தலையில் தண்டினால் அது நமது முன்னோர்களுக்கு ஏதோ ஒன்றை செய்யாமல் விட்டிருக்கிறோம். அது காகத்தின் மூலம் நம்மிடம் வந்து அவர்கள் கூறுகின்றனர் என சாஸ்திரத்தின் மூலம் கூறப்படுகின்றது.

இப்படி நடந்தால் நாம் வீட்டில் நல்லெண்ணெய் விட்டு குல தெய்வத்தை வணங்க வேண்டும். கோவில் விளக்கு ஏற்றினால் சனீஸ்வர பகவானுக்கு எள்ளு விளக்கு ஏற்றலாம். காகத்திற்கு நாம் அன்றாட உணவு வைக்கலாம்.

 

அடுத்து வரும் அமாவாசை நாளில் நம் முன்னோர்களுக்கு முழு படையல் போட்டு வழிபடலாம். மாற்று திறனாளிகளுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்வது நல்லது. காகம் தலையில் தட்டினால் நாம் செய்யும் காரியங்களில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.