உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அவசர தேவைகளின் போது பயன்பகடுத்த அனுமதியளிக்கப்பட்ட கொடுவிட் தடுப்பூவிகளை மாத்திரமே நாட்டுக்கு கொண்டுவர எதிர்பார்த்துள்ள தொற்று நோய் தடுப்பு பிரிவின் தலைவர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
கொவிட் தடுப்பூசிகளை நாட்டுக்கு கொண்டு வரும் பணிகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
´கொவிட் தடுப்பூசிகளை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அது தொடர்பான பீர்வாங்க விடயங்கள் குறித்து ஆராய்ந்துள்ளோம். எவ்வகையான தடுப்பூசியை பெறுவது அவற்றை களஞ்சியப்படுத்துவதற்கான வசதிகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. மேலும் அதனை போக்குவரத்து செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையில் இருப்பவர்கள், நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி ஏற்றுவதில் முன்னுரிமை வழங்கப்படும்´
இதேவேளை, பாடசாலைகள் திறக்கப்பட்ட பின்னர் கொவிட் அபாயத்தைக் குறைக்க அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் என டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
´ எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன. இதன்போது முழுமையாக சுகாதார வழிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். குறிப்பாக ஒன்றாக சேர்ந்து உணவருந்தாமல் பார்த்துக் கொள்வதையும், ஒன்றாய் கூடுவதை தவிர்க்குமாறு பிள்ளைகளை தெளிவுப்படுத்த வேண்டும்´
இதேவேளை, வெளிநாட்டினர் வருகை தரும் போது நாட்டில் சமூகத்துடன் சேராத வகையில் பாதுகாப்புடன் செயற்படுவது அவசியம் எனவும் அவர் கூறினார்.
வெளிநாடுகளில் இருந்து எவரும் வந்தால் அவர்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியதன் அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ள கொவிட் தடுப்பூசி
