சனி பகவான் கும்ப ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் வருகின்ற நவம்பர் மாதம் சனிபகவான் வக்கிர நிவர்த்தி அடைகின்றார்.
நவம்பர் மாதம் முதல் சில ராசிகள் யோகத்தை பெறப்போகின்றனர். சனி பகவான் நவக்கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வரக்கூடியவர்.
சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். இவர் நன்மை தீமைகளை பிரித்து கொடுக்கக்கூடியவர்.
வக்ர நிலையில் பயணம் செய்து வரும் சனி வருகின்ற நவம்பர் மாதம் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். நவம்பர் மாதம் முதல் சில ராசிகள் யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மகரம்
- சனிபகவான் மகர ராசியில் இரண்டாவது வீட்டில் வக்கிர நிபர்த்தி அடைய உள்ளார்.
- இதனால் உங்களுக்கு முடிவுக்கு வராமல் இருந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.
- இதுவரை இருந்த கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.
- பல நாட்களுககு பின்னர் குடும்பத்தினரோடு நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்.
- வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.
ரிஷபம்
- உங்கள் ராசியில் சனிபகவான் பத்தாவது வீட்டில் சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைய உள்ளார்.
- இதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடமான சூழ்நிலை விலகும்.
- எதிர்பாராத புதிய வேலைவாய்ப்புக்கள் தேடி வருவதால் பணம் சம்பாதிக்கலாம்.
- உடன் பிறந்தவர்கள் உங்கள் கஷ்டங்களில் உறுதணையாக இருப்பார்கள்.
- உயர் அலுவலகர்களிடம் இருந்து உங்களுக்கான மரியாதையும் சிறப்பையும் பெற்றுக்கொள்வீர்கள்.
- எந்த காரியத்தை எடுத்தாலும் வெற்றிகரமாக முடியும்.
கன்னி
- உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைய உள்ளார்.
- இதுவரை நீங்கள் சந்தித்த தேவையற்ற செலவுகள் இல்லாமல் போகும் பணம் சேமிக்கப்படும்.
- தொழில் வியாபாரம் இருந்தால் எதிர்பாராத முன்னேற்றத்தை பெறுவீர்கள்.
- வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலகர்கள் உங்களுக்கு பொறுப்பான வேலையை ஒப்படைப்பார்கள்.
- நிதியில் முன்னேற்றம் இருப்பதுடன் பணத்திற்கு பஞ்சம் இருக்காது.
- வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
- உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.