மருத்துவ குணமிக்க மூலிகை பொருள்கள் அனைத்து வயதினருக்கும் எப்போதும் பக்கபலமாக இருக்கும்.
இதை மருந்தாக நோய் வந்த பிறகு எடுத்துகொள்ளாமல் அவ்வபோது உணவில் சேர்த்து வருவதுதான் நோய் வருவதற்கு முன்னர் காப்பது என அர்த்தம்.
நம்மில் அனைவருக்கும் சளி இருமல் போன்ற தொற்றுக்கள் ஏற்படுவது வழக்கம். இந்த தொற்று வராமல் தடுக்க சிறந்த ஒரு இலை தூதுவளை இலை தான் இதை தினமும் சூப் வைத்து குடிப்பதால் என்ன பயன் என்பதை இந்த பதிவில் பார்க்க முடியும்.
இதை செய்ய
தேவையான பொருட்கள்
- 2கைப்பிடி தூதுவளை
- ஒரு ஸ்பூன் மிளகு
- ஒரு ஸ்பூன் சீரகம்
- எட்டு சின்ன வெங்காயம்
- கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
- ஒரு நாட்டு தக்காளி
- 5 பல் பூண்டு
- இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய்
- தேவையான அளவு உப்பு
- சிறிதளவு கொத்தமல்லி இலைகள்
செய்யும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணை ஊற்றி மிளகு, சீரகம், வெங்காயம், பூண்டு, போட்டு வதக்கி பின்னர் தண்ணீர் ஊற்ற வேண்டும். பின்னர் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின்னர் தூதுவளை இலை போட்டு ஐந்து நிமிடங்களில் இறக்கி பருகினால் ஆரோக்கியமான சூப் தயார்.
தூதுவளை சாப்பிடுவதன் நன்மைகள்
எப்போதும் மருத்துவ குணம் கொண்ட காய்கறிகள் இலைகள் சாப்பிடுவது உடலுக்கு நன்மை தரும். முதலில் நோய்த்தொற்று கிருமிகள் பரவும் அல்லது தாக்கும் இடம் தொண்டை தான்.
தொண்டையில் தொற்று, சளி, இருமல் காய்ச்சல் போன்றவை வரவிடாமல் இந்த தூதுவளை தடுக்கிறது. மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நீர், போன்றவற்றிற்கு தூதுவளைக் கீரை சிறந்த மருந்து.
மிகவும் முக்கியமான பயன் ஒன்றும் உள்ளது. எதிர்பாராத விதமாக ஒருவரைத் தேள் பூரான், தேனி ,வண்டுகள் ,பூச்சிகள் போன்ற ஏதாவது ஒரு விஷ சந்து கடித்துவிட்டால் ,சம்பந்தப்பட்ட நபரைக் காப்பாற்ற தூதுவளை கைகொடுக்கும்.
பாம்பு கடி பட்டவரை கூட மீட்டெடுக்கும் சக்தி இதற்கு உள்ளது. ஆண்மை குறைபாட்டால் அவதிக்குள்ளாகும் ஆண்களுக்கு இந்த இலை சிறந்த மருந்து. தூதுவளையில் கால்சியம் சத்து அதிகளவு காணப்படுகின்றது.
இதனை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்களின் எலும்புகள் மற்றும் பற்கள் பலமடையும். இதனை சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வரத் தொடங்கும்.
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இந்த இலையை தினமும் சாப்பிடுவது நல்லது. வாதம் மற்றும் பித்த பிரச்னைகளால் பல்வேறு வியாதிகள் உடலில் ஏற்படும். இதற்குத் தூதுவளை மிகச் சிறந்த மருந்தாக உள்ளது.
தூதுவளை செரிமான சம்பந்தமான கோளாறுகளை தீர்க்க உதவும். கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருப்பவர்கள் இந்த இலையை சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் தீரும்.
கண் வலி சரியாகி விடும். கண் பார்வை குறைபாடுகள் நீங்கி வலிமை அடையும். தூதுவளையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் இயற்கையாகவே எதிர்ப்புச் சக்தியை பெற்று தருகிறது.