மட்டக்களப்பு வாகரைபொலிஸ் பிரிலிலுள்ள கதிரவெளி பிரதேசத்தில் மோட்டர் சைக்கிள் வீதியை விட்டுவிலகி மரத்துடன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (23) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

வாகரையைச் சேர்ந்த 30 வயதுடைய ஆனந்தராஜா பார்த்தீபன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் 

குறித்த நபர் வாழைச்சேனை திருகோணமலை வீதியிலுள்ள கதிரவெளிபகுதில் சம்பவதினமான நேற்று மாலை மோட்டர்சைக்கிளில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி கபட்டிலுள்ள மரத்துடன் மோதிவிபத்துக்கள்ளானதில் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார் 

இவ்வாறு உயிரிழந்தவரை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.