நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் அடையாளம் காணப்பட்ட 468 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள் தொடர்பான தகவலை கொவிட் – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி வெளியிட்டுள்ளது.
அதன்படி கொழும்பு மாவட்டத்தில் 183 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 72 பேரும் கண்டி மாவட்டத்தில் 73 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 06 பேரும் பதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேபோல அம்பாறை மாவட்டத்தில் 07 பேரும் புத்தளம் மாவட்டத்தில் ஒருவரும் நுவரெலியா மாவட்டத்தில் 07 பேரும் யாழ். மாவட்டத்தில் 06 பேரும் வவுனியா மாவட்டத்தில் இருவரும் திருகோணமலை மாவட்டத்தில் 08 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவரும் கடந்த 24 மணி நேரத்திற்குள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் இதுவரையில் 45 ஆயிரத்து 242 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 37 ’ஆயிரத்து 817 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 7 ஆயிரத்து 210 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் நாட்டில் உறுதி செய்யப்பட்டுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.