கிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனிபகவான். இவர் ஒரு மனிதனுக்கு எந்த நேரத்தில் எதை கொடுக்க வேண்டும், எந்த நேரத்தில் அவர்களிடம் அதை பறிக்க வேண்டும் என்று நன்கு அறிந்தவர். இருப்பினும் மக்கள் சனியின் பிடியில் இருந்து அவ்வளவு எளிதாக தப்பித்து விடமுடியாது என்பதே உண்மை.

அதனால், பலரும் சனிபகவானின் அருள் கிடைக்கவும், அவரின் கெட்ட பார்வை குறையவும் வேண்டுதல் வைப்பார்கள். அப்படியாக, சனியின் தாக்கம் குறைய நாம் செய்ய வேண்டிய எளிய வழிபாடுகள் பற்றி பார்ப்போம்.

சனி பகவானின் தாக்கம் குறைய செய்ய வேண்டிய எளிய வழிபாடுகள் | Easy Prayers To Reduce Lord Shani S Bad Effects

 யாராவது புரட்டாசி மாதம் சனிக்கிழமை முழுவதும் விரதம் இருந்து சனி பகவானை வழிபாடு செய்கிறார்களோ அவர்களை சனி பகவான் நெருங்குவது இல்லை. மேலும், புரட்டாசி சனிக்கிழமைகளில் நாம் பிறரிடம் கடன் வாங்குவதையும் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். ஆனால், அந்த நாளில் நாம் அதிக அளவில் தர்மங்கள் செய்வது நமக்கு சிறந்த பலன் கொடுக்கும் என்கிறார்கள். அதோடு, அன்றைய தினம் நாம் காகத்திற்கு எள்ளும் வெள்ளமும் கலந்த சாதம் வைத்தால் சனியின் தாக்கம் நீங்கும்.

 சனி பகவானின் தாக்கம் குறைய செய்ய வேண்டிய எளிய வழிபாடுகள் | Easy Prayers To Reduce Lord Shani S Bad Effects

 சனி பகவான் நேர்மையான மற்றும் நல்ல மனிதர்களை துன்பத்திற்கு ஆளாக்குவது இல்லை. அவர்களுக்கு அவர்களை சுற்றி உள்ளவர்களின் உண்மை முகத்தை அறிந்து கொள்ளவே சில பாடங்கள் கொடுக்கிறார். ஆக, அவ்வாறு சங்கடங்கள் சந்திப்பவர்கள் கட்டாயம் சனிக்கிழமையில் சனிபகவானை சென்று தரிசித்து வர மனம் தெளிவு அடையும். 

எவர் ஒருவர் தொடர்ந்து பிரதோஷ நாட்களில் சிவனை வழிபடுகிறார்களோ அவர்களை சனிபகவான் ஒரு பொழுதும் தண்டிப்பது இல்லை.

அதோடு சனிக்கிழமை சுதர்சன இயந்திர வழிபாடு செய்வது சனி பகவானுக்குப் பிடித்தமான ஒன்றாகும். மேலும், ஸ்ரீராம நாமத்தை உச்சரிப்பவர்களையும் சிவபெருமானின் ‘நமசிவாய’ எனும் நாமத்தை உச்சரிப்பவர்களையும் சனி பகவான் பாதிப்பதில்லை.

சனியின் கோபத்தில் இருந்து விடுபட புரட்டாசி மாதம் முழுவதும் அசைவம் சாப்பிடாமல் இருந்தால் சனி பகவானின் கோபமான பார்வை குறைகிறது.