டெல்டா மாவட்டங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) கனமழை பெய்யும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ இன்று தமிழக வடமாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும். கடலுார், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் புதுச்சேரியில்,  ஓரிரு இடங்களில் இடி,  மின்னலுடன் கன மழை பெய்யும்.

அதேபோல வரும் 6, 7ம் திகதிகளில் மாநிலத்தில் பரவலாக சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் சில இடங்களில் லேசான மழை பெய்யும்” என  அறிவிக்கப்பட்டுள்ளது.