UPDATE 03 – நாட்டில் மேலும் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,710 ஆக அதிகரித்துள்ளது.

அந்தவகையில் இன்றுமட்டும் மாலை 06 மணி நிலவரப்படி 27 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 19 பேர் கட்டாரில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்றும் ஒருவர் குவைத்தில் இருந்து நாடு திரும்பு தனிமைப்படுத்தப்பட்டவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு 07 பேர் கடற்படையினர் என்றும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அந்தவகையில் தற்போது 863 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளதாகவும் 836 பேர் குணமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.


UPDATE 02 நாட்டில் மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த மொத்த எண்ணிக்கை 1,692 ஆக அதிகரித்துள்ளது.

அந்தவகையில் இன்றுமட்டும் மாலை 06 மணி நிலவரப்படி 09 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் கண்பட்டவர்களில் 07 பேர் கடற்படையினர் என்றும் 02 பேர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் தற்போது 845 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.


UPDATE 01 இலங்கையில் மேலும் 03 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,686 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இன்றுமட்டும் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 13 பேர் பூரண குணமடைந்து வைத்திசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.