சென்னை: உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் இயக்குநர் ரஞ்சித் (25). இவர், சோழிங்கநல்லூரில் வசித்து வருகிறார். சென்னை அடுத்த அக்கரை பகுதியில், இயக்குநர் ரஞ்சித் வெப் சீரியல் ஷூட்டிங் நடத்தி வந்தார். இதில், சுவேதா (25) என்ற இளம்பெண் நடித்து வந்தார். இந்நிலையில், ரஞ்சித், சுவேதாவிடம் தன்னை காதலிக்க வற்புறுத்தியதோடு, பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை சுவேதா பலமுறை கண்டித்து வந்தார். அதனை பொருட்படுத்தாமல், தொடர்ந்து சுவேதாவுக்கு ரஞ்சித் தொல்லை கொடுத்து வந்தார். இதனால், மனமுடைந்த சுவேதா நேற்று முன்தினம் மாலை கானத்தூர் காவல் நிலையில் புகார் அளித்தார். புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் வேலு, ரஞ்சித் மற்றும் அவரது உதவியாளர்கள் கார்த்திக் (26), ரியாஸ் (23) ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில், ரஞ்சித், சுவேதாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து ரஞ்சித்தை கைது செய்த போலீசார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
நடிகைக்கு பாலியல் தொல்லை வெப் சீரியல் இயக்குநர் கைது
- Master Admin
- 18 December 2020
- (512)
தொடர்புடைய செய்திகள்
- 18 December 2020
- (860)
"இதுக்கு சன்னி லியோன் பரவாயில்ல போல.." -...
- 19 December 2020
- (493)
டி.வி. நடிகை சித்ராவுக்கு நெருக்கமானவர்க...
- 06 May 2021
- (949)
பிக்பாஸ் சீசன் 4 பிரபலத்திற்கு கொரோனா தொ...
யாழ் ஓசை செய்திகள்
UN இலங்கைக்கு Red Alert - எல் நினோவால் பெருமழை சாத்தியம்
- 01 September 2026
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான தகவல்
- 01 September 2026
சிறுமிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை: இளைஞன் கைது
- 01 September 2026
யாழ்ப்பாணத்தின் மறைந்திருக்கும் சொர்க்கம் | 2000 ஆண்டுகள் பழமை!
- 01 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 18 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்
- 01 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
- 22 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
