தற்போது மீன ராசியில் 4 செல்வாக்கு மிக்க கிரகங்களான சுக்கிரன், புதன், சனி மற்றும் ராகு ஆகிய கிரகங்களின் அரிய சதுர்கிரஹ யோகத்தை உருவாக்குகிறார்கள். இந்த சிறப்பு சேர்க்கை மே முதல் வாரம் வரை சில ராசிகளுக்கு பல விதத்தில் அற்புதமான பலன்கள் கிடைக்கும்.
சில ராசிகளுக்கு பல விதங்களில் முன்னேற்றத்தையும், லாபத்தையும் தரும் அவ்வாறு பல நன்மைகளை தரும் ராசிக்கள் எவையென நாம் இங்கு பார்ப்போம்.
ரிஷப ராசி
ரிஷப ராசிக்காரர்களுக்கு சதுர்கிரஹ யோகம் மிகவும் சிறப்பாக இருக்கும். வணிகம் தொடர்பாக இந்த நேரம் சாதகமாக இருக்கும். அதன் மூலம் உங்களுக்கு நிதி நன்மைகள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். நீங்கள் துணிச்சலான முடிவுகளை எடுக்க முடியும். இது எதிர்காலத்தில் மகத்தான நன்மைகளைத் தரும். குரு ரிஷபத்தில் சஞ்சரிப்பதால் இந்த ராசிக்காரர்களுக்குப் பல நன்மைகள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில், ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆன்மிக நடவடிக்கைகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
உங்கள் குடும்பத்துடன் நீங்கள் ஆன்மிக யாத்திரை செல்ல வாய்ப்புள்ளது. மரியாதை அதிகரிக்கும். பணியிடத்தில் நற்பெயர், வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான சூழல் இருக்கும். திருமணத்திற்கு தகுதியானவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
மிதுன ராசி
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த சதுர்கிரக யோகம் வேலை, வியாபாரம் மற்றும் குடும்பம் என எல்லாவற்றிலும் நன்மைகளைத் தரும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் திட்டங்கள் நிறைவேறும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் எதிர்காலத்தில் உங்களுக்கு நன்மை உண்டாகும். வியாபார சம்பந்தமாகப் பயணம் செல்ல வாய்ப்புள்ளது. அந்தப் பயணம் மகிழ்ச்சியாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். உங்கள் வாழ்க்கை ஒரு புதிய திசையில் செல்லும்.
மார்க்கெட்டிங், மீடியா, எழுத்து, போதனை போன்ற துறைகளில் வேலை செய்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். மரியாதை அதிகரிக்கும். இந்த நேரம் எதிர்பாராத விதமாகப் பணம் வரவு கிடைக்கும். உங்கள் பேச்சில் இனிமை அதிகரிக்கும். இதன் மூலம் நீங்கள் புதிய உயரங்களைத் தொடுவீர்கள். நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த வேலைகள் முடிக்க முடியும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். உங்கள் நண்பர்கள் மற்றும் வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.
தனுசு ராசி
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த சதுர்கிரக யோகம் அதிர்ஷ்டத்தைத் தரும். இந்த நேரத்தில் உங்களுக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கும். வேலைகளில் இருந்த தடைகள் நீங்கும். கடின உழைப்பாலும், நேர்மையாலும் அதிக லாபம் பெறுவீர்கள். வியாபாரத்தில் உங்கள் புகழ் அதிகரிக்கும். உங்கள் நம்பிக்கையான குணத்தால், அலுவலகத்தில் உங்களுக்கு பெரிய பதவி கிடைக்கலாம். வெளிநாடு பயணம், உயர் கல்வி மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுக்க இது நல்ல நேரம்.
அலுவலகத்தில் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். உங்கள் எண்ணங்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உங்கள் குழந்தைகளிடமிருந்து நல்ல செய்தி கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் உதவியால், புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள்