தற்காலத்தில் அனைத்தும் தெழில்நுட்ப மயமாகிவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சமூகவளைத்தளங்களில் தான் கண்விழிக்கின்றார்கள் என்றால் மிகையாகாது.

அந்த வகையில் தினமும் நாம் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தினாலும் அதில் நமக்கு தெரியாத ஏராளமான விடயங்கள் இருந்துக்கொண்டுதான் இருக்கின்றது.

இந்த வகையில் பல பயனாளர்கள் தங்களுடைய பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை ஒன்றாக இணைத்து வைப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

சில விடயங்களை பகிர்வதற்கு இலகுவாக இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு இரண்டு கணக்குகளையும் இணைத்து வைத்திருக்கின்றார்கள்.

ஆனால் சில நேரங்களில் தனிப்பட்ட காரணங்களுக்காக இரண்டு ப்ரொபைல்களையும் பிரித்து பாவிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

அவ்வாறன சந்தர்ப்பங்களில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்களை எளிமையான முறையில் அன்லிங்க் செய்வது எப்படி என்பது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.

இன்ஸ்டாகிராம் அப்ளிகேஷனை திறந்து கீழ் வலதுபுறம் காணப்படும் ப்ரொபைல் ஐகானை click செய்ய வேண்டும்.

பின்னர் மெனு ஐகானை கிளிக் செய்து செட்டிங்ஸ் மற்றும் பிரைவசி ஆப்ஷனுக்கு செல்ல வேண்டும்.

அவற்றுள் அக்கவுண்ட்ஸ் சென்டர் என்பதை தெரிவு செய்தால் அக்கவுண்ட்ஸ் ஆப்ஷனுக்கு கொண்டு செல்லும்.

அதில் உங்களுடைய பேஸ்புக் அக்கவுண்டிற்கு அருகில் இருக்கும் ரிமூவ் என்பதை டேப் செய்ய வேண்டும். 

பின்னர் ரிமூவ் அக்கவுண்ட் என்பதை டேப் செய்து, கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை படித்து, கன்டின்யூ (continue) என்பதை click செய்து, பின்னர் யெஸ் ரிமூ (அக்கவுண்ட் பெயர்) என்பதை தெரிவு செய்தால் unlink செய்ய முடியும்.

பேஸ்புக் அப்ளிகேஷனை பயன்படுத்தி அன்லிங்க் செய்வது எப்படி?

முதலில்  பேஸ்புக் அப்ளிகேஷனை திறந்து கீழ் வலதுபுறம் காணப்படும் ப்ரொபைல் ஐகானை click செய்ய வேண்டும்.

பின்னர் அதனுள் உள்ள செட்டிங்ஸ் & பிரைவேசி ஆப்ஷனை click பண்ண வேண்டும்.

பின்னர் அக்கவுண்ட்ஸ் சென்டர் ஆப்ஷனில் சீ மோர் என்பதை தெரிவு செய்ய வேண்டும்.

 

பின்னர் கீழே ஸ்க்ரோல் செய்து அக்கவுண்ட்ஸ் என்பதை click செய்ய வேண்டும்.

அதன் பின்னர் உங்களுடைய இன்ஸ்டாகிராம் அக்கவுண்டிற்கு அருகில் உள்ள ரிமூவ் என்பதை click செய்ய வேண்டும்.

ரிமூவ் அக்கவுண்ட் என்பதை டேப் செய்து, கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை படித்து, கண்டின்யூ (continue) என்பதை click செய்து பின்னர் யெஸ் ரிமூ (அக்கவுண்ட் பெயர்) என்பதை click செய்தால் கணக்குகள்  unlink செய்யப்படும்.