கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாத இறுதியில் மத்திய அரசால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன்பின் அடுத்தடுத்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து படிப்படியாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

கடந்த அக்டோபர் மாதம் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கும்வகையில் வகுப்புகள் தொடங்கி செயல்பட்டு வருகின்றன. கல்லூரிகளை திறக்கவும் அரசு முடிவு செய்து இளங்கலை, முதுகலை படித்து வரும் மாணவர்களுக்கான இறுதியாண்டு வகுப்புகள் இன்று முதல் தொடங்குகிறது.

இந்தநிலையில் கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

தொடர் கனமழையால் புதுச்சேரியில் 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.