கொரோனா தொற்று காரணமாக கடந்த வாரம் மூடப்பட்ட கண்டி மாவட்டத்தின் 42 பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளை இன்றைய தினம் (14) மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நகரில் அமைந்துள்ள மூன்று பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ. கமகே தெரிவித்தார்.

கணடியில் கொவிட் தொற்றாளர்களின் அதிகரிப்பு காரணமாக கடந்த தினம் கண்டி மாவட்டத்தின் 45 பாடசாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கண்டி பகுதியில் தற்போதைய நிலைமையை ஆய்வு செய்த பின்னர் 42 பாடசாலைகளை இன்றைய தினம் திறக்க தீர்மானிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.