சினிமா பிரபலங்கலின் வாரிசுகள் மாத்திரமே சினிமா துறையில் முன்னேற முடியும் என்ற காலத்திலேயே எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் தனது திறமையின் மூலம் சினிமாத்துறைக்குள் வந்து பலசாதனைகளை படைத்து இன்று முன்னணி நடிகைகளின் பட்டியலில் ஒருவராக இடம் பிடித்துள்ளார் கங்கனா ரணாவத்.
"த்ரில்லர் கான்ஸ்டர்" என்ற ஹிந்தி திரைப்படத்தின் ஊடாக திரையுலகிற்க்கு அறிமுகமானவரே கங்கனா ரணாவத் ஆவார். இவர் தமிழில் ஜெயம் ரவியின் "தாம் தூம்" திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதனை அடுத்தே சந்திரமுகி பாகம் இரண்டிலும் நடித்திருந்தார். இது பிளாப் படமாக இருந்தாலும் இவரின் நடிப்பு பெரும் அளவில் பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தற்போது இந்தியாவில் நடைபெறும் மக்களவை தேர்தலில் மோடியின் கட்சியான பா.ஜ.க சார்பில் இமாச்சல பிரேதேசில் , மண்டி தொகுதியில் போட்டியிடுகிறார் கங்கனா ரணாவத். இது தற்போது வைரலாகி வருகின்றது.
இவர் தற்போது அரசியலில் இறங்கி இருந்தாலும், இதற்கு முன்பே பல பேட்டிகளில் எனக்கு அரசியலில் ஆர்வம் உள்ளது என்றும் ,நான் பிரதமர் மோடியின் ரசிகை என்றும் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.