பிரித்தானியாவில் பெற்றோர் கண் முன்னே 7 வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த பெண்மணியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. ஆள் கடத்தும் கும்பலால் தாம் பாதிக்கப்பட்டவர் என நம்ப வைத்தே அல்பேனியரான Eltiona Skana பிரித்தானியாவில் அடைக்கலம் தேடியுள்ளார். உளவியல் பாதிப்புக்கு இலக்கான 30 வயதான ஸ்கனா சம்பவத்தன்று, பூங்கா ஒன்றில் பெற்றோருடன் இருந்த 7 வயதேயான எமிலி ஜோன்ஸ் என்ற சிறுமியை கழுத்தில் கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளார்.

றார்கள் மீது வன்மம் கொண்ட ஸ்கனா, அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதை, அவரை கண்காணித்து வரும் ஊழியர்கள் கண்டறிய தவறியதாக கூறப்படுகிறது.

ஸ்கனாவை கட்டுப்படுத்தாமல் பிரித்தானிய தெருக்களில் நடமாட அனுமதித்த அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என்பது மட்டுமின்றி, கட்டாயம் பணியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என சிறுமி எமிலி ஜோன்சின் தந்தை மார்க் காட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும், ஸ்கனா எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக் கூடிய வெடிகுண்டு போன்றவர் எனவும் மார்க் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த 2024-ல் சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்த ஸ்கனா, தாம் ஆள்கடத்தல் கும்பலால் பாதிப்புக்கு உள்ளானவள் என நம்ப வைத்து அடைக்கலம் கோரியுள்ளார்.

ஆனால் உள்விவகார அலுவலகம் அவரது கோரிக்கையை நிராகரித்தது, அதன் பின்னர் ஸ்கனா மேல் முறையீடு செய்ய, தனது முடிவை மாற்றிய உள்விவகார அலுவலகம், டிசம்பர் 2024 வரை பிரித்தானியாவில் தங்குவதற்கு அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் 2015-ல் அண்டைவீட்டாரை கத்தியை காட்டி மிரட்டியதாக கூறி, வழக்குப்பதியப்பட்டது, ஆனால் 2 ஆண்டுகளுக்கு பின்னர் தாயாரை தாக்கியதாக கூறி கைது செய்யப்பட்டார்.

ஸ்கனா அச்சுறுத்தல் அளிக்கக் கூடியவர் என தெரிந்திருந்தும், அவருக்கு போதுமான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.