கொழும்பு - மவுண்ட்லவனியா பொலிஸ் பிரிவில் 16 வயது சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் Aldon Devon Kenny என்ற சிறுவனே காணாமல் போயுள்ளார்.

பம்பலப்பிட்டிய புனித பீட்டர் கல்லூரியில் சாதாரண தர பரீட்சை படிக்கும் மாணவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த சிறுவன் நேற்று காலை தனது வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

அவர் கடைசியாகக் காணப்பட்ட நேரத்தில் கருப்பு நிற மேலாடை, கருப்பு காற்சட்டை அணிந்திருந்தார்.

“சம்பவ தினத்தன்று காலை தனது மகன் பள்ளிக்குச் செல்ல மறுத்துவிட்டான், ஆனால் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறினான்” என்று தாய் கூறினார்.

காணாமல் போன சிறுவன் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.