பொதுவாகவே நமது வாழ்வில் அனைத்து விடயங்களிலும் எண்கள் தொடர்புப்படுகின்றன. எண்களால் வாழ வைக்கவும் முடியும். அது போல் வீழ்த்தவும் முடியும் என எண்கணித ஜோதிடம் குறிப்பிடுகின்றது.
எண் கணித சாஸ்திரம் எனப்படுவது ஒருவர் பெயருக்கும், பிறந்த திகதி, மாதம், வருடம், பெயர் அனைத்தின் கூட்டுத்தொகையாக வரும் எண்ணுக்கும் அவர்களின் எதிர்கால வாழ்விற்கும் இடையில் உள்ள தொடர்பை கணித்து கூறும் ஒரு பழங்கால முறையாகும்.
தொன்று தொட்டு இந்த சாஸ்திரம் புலக்கத்தில் இருந்து வருகின்றது. அந்த வகையில் எண்கணித ஜோதிடத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில திகதிகளில் பிறக்கும் பெண் குழந்தைகள் தந்தைக்கு அளவில்லா செல்வத்தையும் ராஜ யோகத்தையும் கொடுப்பார்கள் என்று நம்பப்படுகின்றது.
இப்படி தந்தையை செழிப்பாக வாழவைக்கப்போகும் பெண் குழந்தைகள் எந்தெந்த திகதிகளில் பிறந்தவர்கள் எனவும் அவர்களின் சிறப்பம்சங்கள் தொடர்பிலும் இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாகவே தந்தைக்கு மகளுக்கு இடையில் இருக்கும் பிணைப்பு வார்த்தைகளால் குறிப்பிட முடியாது. தந்தையின் மனதை பொருத்தவரையில் மகள் எப்படியிருந்தாலும் அவரின் கண்களுக்கு இளவரசிதான்.
அது போல் மகளும் தாயை விட்டக்கொடுத்தாலும் தந்தை ஒரு போதும் விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள். எப்போதுமோ மகளின் பார்வையில் தந்தை ஹீரோ தான்.
அந்த வகையில் எண்கணித ஜோதிடத்தின் பிரகாரம் 3-ம் எண்ணில் பிறந்த மகள் தன் தந்தைக்கு மாபெரும் அதிர்ஷ்டத்தை கொடுப்பார்களாம்.
அதனடிப்படையில் 3, 12, 21, 30 ஆகிய திகதிகளில் பிறந்த பெண் குழந்தைகள் லட்சுமி தேவியின் பூரண ஆசீர்வாதத்தை பெற்றர்கள் என சாஸ்திரங்களில் குறிப்பிடப்படுகின்றது.
இவர்கள் பிறந்தவுடன் தந்தைக்கு தொழில் ரீதியில் அசுர வளர்ச்சி ஏற்டும். வியாரத்தில் ஈடுப்படுபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
இந்த திழகதிகளில் பிறந்த பெண் குழந்தைகள் மிகவும் கருணை உள்ளம் கொண்டவர்களாகவும், சுதந்திரமாக சிந்திக்கக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.
இந்த திகதியில் பிறந்த பெண் குழந்தைகள் தங்கள் தந்தையை நண்பனை போல் நினைப்பார்கள். எந்த வகையிலும் ஒழிவு மறைவு இன்றி அனைத்தையும் பகிர்ந்துக்கொள்வார்கள்.
இவர்கள் தடைகளை தாண்டி வெற்றியடைய கூடிய ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள்.
இந்த திகதிகளில் பெண்குழநை்தை பிறந்தால் நஷ்டத்தில் செல்லும் தொழில்கள் கூட வெற்றியின் உச்சத்தை அடையும்.இவர்கள் தந்தைக்கு வாழ்நாள் முழுவதும் செல்வத்தையும் புகழையும் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்.