நிவர் புயல் மற்றும் புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் கடந்த வாரம் கனமழை பெய்தது. சில மாவட்டங்களில் இன்னும் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ‘‘இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இந்த காலக்கட்டத்தில் இயல்பைவிட 80 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. 6 மாவட்டங்களில் சராசரியை விட குறைவு. 20 மாவட்டங்களில் சராசரி மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் 3,982 ஏரிகள் 100 சதவீதம் கொள்ளவை எட்டியுள்ளது. அடுத்தடுத்து 5 புயல் வரவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். இதுபோன்று தவறான செய்திகளை தொடர்ந்து பரப்புவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தில் நடவடிக்கை பாயும்’’ எனத் தெரிவித்துள்ளார்.