பொதுவாக தொன்று தொற்று மாறாமல் இருக்கும் ஒரு விடயம் என்றால் அது காதல் தான். உலகில் மிக மிக பழைய உணர்வும் காதல் தான் புதிய உணர்வும் காதல் தான். 

வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் இந்த உணர்வை ஒரு முறை கூட சந்திக்காமல் வாழ்க்கையை கடக்கவே முடியாது என்றால், மிகையாகாது.

இந்த ராசி ஆண்கள் தான் காதலில் மன்னர்களாம்....யார் யார்ன்னு தெரியுமா? | Valentines Day Which Male Zodiac Signs Romantic

அப்படிப்பட்ட காதலுக்கும் ஒருவருடைய ராசிக்கும் இடையில் நெருங்கிய தொடர்ப்பு காணப்படுகின்றது என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே காதல் செய்வதில் அதீத ஆர்டவம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

அப்படி காதலில் மொத்த வித்தைகளையும் கற்று வல்லவர்களாக திகழும் ஆண் ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

இந்த ராசி ஆண்கள் தான் காதலில் மன்னர்களாம்....யார் யார்ன்னு தெரியுமா? | Valentines Day Which Male Zodiac Signs Romanticரிஷப ராசியில் பிறந்தவர்கள் காதல் மற்றும் உறவுகளுக்கு இயல்பாகவே அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறப்பெடுத்தவர்கள் என்பதால், வசீகரமான உடல் தோற்றம் கொண்டவர்களாகவும் அன்புக்கான ஏங்கும் குணம் உடையவர்களாகவும் இருப்பார்கள்.

அவர்கள் பார்ப்பதற்கு காதல் மீது ஈடுபாடு இல்லாதவர்கள் போல் தோன்றினாலும் மனதளவில் உண்மையாக காதல் செய்பவர்களாகவும் ரொமேன்டிக்கான நபர்களாகவும் இருப்பார்கள்.

இந்த ராசியினரின் காதல் உண்மையாகவும் இருக்கும் இவர்கள் துணையின் மகிழ்ச்சிக்காக எதையும் செய்ய தயாராக இருப்பார்கள். 

கடகம்

இந்த ராசி ஆண்கள் தான் காதலில் மன்னர்களாம்....யார் யார்ன்னு தெரியுமா? | Valentines Day Which Male Zodiac Signs Romantic

கடக ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.

இவர்களின் காதல் சற்று வித்தியாசமாக இருக்கும் தன் துணையை கவருவதற்காக யாரும் செய்யாத புதிய விடயங்கள் மூலம் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ள ஆசைப்படுவார்கள்.

இயல்பாகவே இவர்களிடம் காதல் மீதான ஏக்கம் சற்று அதிகமாகவே இருக்கும். மற்றவர்கள் பொறாமைபடும் அளவுக்கு இவர்களின் காதல் வாழ்க்கை இருக்கும்.

இந்த ராசி ஆண்களை காதல் செய்யும் பெண்கள் அதிஷ்டசாலிகளாக இருப்பார்கள். இவர்கள் துணையைின் விருப்பத்துக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பார்கள்.

மீனம்

இந்த ராசி ஆண்கள் தான் காதலில் மன்னர்களாம்....யார் யார்ன்னு தெரியுமா? | Valentines Day Which Male Zodiac Signs Romantic

மீன ராசியில் பிறந்த ஆண்கள் அனைத்து ராசிகளை விடவும் காதல் உணர்வு அதிகம் கொண்டவ்களாக இருப்பார்கள்.

இவர்கள் காதல் செய்வதில் காட்டும் அதே ஆர்வத்தை  துணை இவர்களை காதல் செய்ய வேண்டும் என்பதிலும் காட்டுவார்கள். 

இந்த ராசியினர்  ரொமான்டிக்கான காதலராக தான் நிச்சயம் இருப்பார்கள். இவர்கள் தங்களின் அன்புக்குரியவர்களைப் புரிந்துகொண்டு ஆதரிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.