மனிதர்களாக பிறந்த அணைவருக்கும் நாம் மற்றவர்களை விட அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
உண்மையில் அழகு என்பது பார்பவர்களின் கண்களில் தான் இருக்கிறது. கடவுளின் படைப்பில் நாம் ஒவ்வொருவரும் ஒரு விதமான அழகு தான்.
ஜோதிடத்தின் படி, குறிப்பிட சில ராசிக்காரர்களில் பிறந்தவர்கள் மாத்திரம் மற்றவர்களை விட அழகாக இருப்பார்களாம். இந்த அழகு இயற்கையிலேயே அவர்களுக்கு இருப்பதால் மற்றவர்களால் அதிகமாக கவரப்படுவார்கள்.
உடல் தோற்றத்தாலோ, காந்த ஆளுமைகளாலோ அல்லது வசீகரிக்கும் ஆற்றலாலோ எப்போதும் கூட்டத்தில் தனித்து விளங்குவார்கள்.
அந்த வகையில், உடல்ரீதியாக மிகவும் அழகானவர்களாக இருக்கும் பெண்களின் ராசிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
1. சிம்மம்
- சூரியனால் ஆளப்படும் ராசியாக சிம்ம ராசி பார்க்கப்படுகிறது. இவர்கள் இயற்கையில் வசீகரம் மற்றும் ராஜ கம்பீரமாகவும் இருப்பார்கள். மற்றவர்களை விட இவர்களிடம் அசைக்க முடியாத தன்னம்பிக்கை காணப்படும். வசீகரத்திற்கு முக்கியக் காரணமாக அவர்களின் வலிமையான ஆளுமை பார்க்கப்படுகிறது. எங்கு சென்றாலும் அனைவரையும் திரும்பி பார்க்க வைப்பார்கள். குணங்களும் அவர்களும் அப்படியே இருக்கும்.
2. துலாம்
- அழகு மற்றும் அன்பின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் துலாம் ராசியில் பிறந்தவர்கள் சக்கரத்தின் மிக அழகான ராசியாக பார்க்கப்படுகிறது. இவர்கள் குணம் மற்றும் முகம் இரண்டும் அவ்வளவு அழகாக இருக்கும். மிகவும் நேர்த்தியாக இருப்பார்கள். நம்ப முடியாத அளவுக்கு கவர்ச்சியாக இருப்பார்கள்.
3. விருச்சிகம்
- செவ்வாய் மற்றும் புளூட்டோவால் ஆளப்படும் விருச்சிக ராசியினர் மற்றவர்களால் தவிர்க்க முடியாத மர்மமான மற்றும் தீவிரமான அழகை கொண்டிருப்பார்கள். இவர்கள் உண்மையில் தேடும் கண்களுக்கு விருந்தாளியாக இருப்பார்கள். மற்றவர்களின் ஆன்மாவுடன் நேரடியாக பார்க்கும் வசீகரம் கொண்டவர்கள். அவர்களின் தோற்றத்தை தாண்டிய மர்மம் இருக்கும்.