வங்க கடல் பகுதியில் கடந்த 21-ந் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக உருவானது. அது தற்போது அதி தீவிர புயலாக இன்று மாலை காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரி இடையே கரையை கடக்க இருக்கிறது.


இந்த நிலையில் புயல் கரையை கடந்த பிறகு அடுத்த 3 நாட்களில் வங்க கடல் பகுதியில் தாய்லாந்து வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது என்றும், அதன் நிலையை பொறுத்து அடுத்தகட்டமாக புயலாக மாறுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.