நவகிரகங்களின் தலைவனாகக் கருதப்படும் சூரிய பகவானின் ஒவ்வொரு நகர்வும் ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சூரியன் அதிகாரம், தலைமைத்துவம், தன்னம்பிக்கை மற்றும் புகழின் அடையாளமாக விளங்குகிறார்.

அந்த வகையில், எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி சூரியன் அனுஷம் நட்சத்திரத்திற்குள் பிரவேசிக்கவுள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிபதியாக சனி பகவான் இருப்பதால், சூரியனின் இந்த மாற்றம் ஜோதிட ரீதியாக முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

இந்த நட்சத்திரப் பெயர்ச்சியால் குறிப்பாக மூன்று ராசிக்காரர்களுக்கு தொழில், பொருளாதாரம் மற்றும் குடும்ப வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகிறது.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திர மாற்றம் நிதி ரீதியாக சாதகமான பலன்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்டகாலமாக இருந்து வந்த பணப் பிரச்சினைகள் குறையவும், புதிய வருமான வாய்ப்புகள் உருவாகவும் வாய்ப்புள்ளது.

திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையலாம். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரிக்கலாம். குழந்தைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சியளிக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படக்கூடும். புதிய தொழில் கூட்டணிகள் உருவாகவும், சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

கல்வி மற்றும் தொழில் சார்ந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கலாம். வெளிநாட்டுப் பயணங்கள், புதிய வாகனம் அல்லது சொத்து வாங்கும் வாய்ப்புகளும் அமையலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திரப் பெயர்ச்சி தொழில் மற்றும் பணவரவில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய வருமான வழிகள் திறக்கப்படுவதுடன், நீண்டகால இலக்குகளை அடைவதற்கான சந்தர்ப்பங்களும் உருவாகலாம்.

மேலும், பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவதுடன், சேமிப்பையும் அதிகரிக்க முடியும் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.