முகம், தொடைப்பகுதி, கழுத்துப்பகுதிகளில் அழகை கெடுக்கக்கூடிய விதத்தில் அமைந்திருப்பதுதான் மருக்கள்.

நம் உடலில் இறந்த செல்கள்தான் மருக்களாக உருவெடுக்கிறது. இனி வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு நம் உடலில் உள்ள மருக்களை எவ்வாறு அழிப்பது என்பதை பார்ப்போம்.

தேவைப்படும் பொருட்கள்

 

  1. இஞ்சி - 4 துண்டு
  2. டூத்பேஸ்ட் - 1/2 தேக்கரண்டி
  3. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
  4. பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை

 

இஞ்சி மண்ணுக்கு அடியில் விளைவதால் அதிகமான நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்தது. இதில் வைட்டமின் A வைட்டமின் C, கால்சியம்,பொட்டாசியம்,சோடியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது.

உடலில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது.வாய் துர்நாற்றம்,பல் வலி ,வாயில் உள்ள கிருமிகளையும் அழிக்கிறது.

இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட இஞ்சியை கழுவி தோல் நீக்காமல் துருவி எடுத்துக்கொள்ளுங்கள்.துருவிய இஞ்சியை வடிகட்டியில் போட்டு ஸ்பூன் கொண்டு அழுத்தினால் இஞ்சி சாறு கிடைக்கும்.

1 தேக்கரண்டி இஞ்சி சாறுடன் 1/2 தேக்கரண்டி Paste,1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள்,ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்துகொள்ளுங்கள்.

இந்த கலவையை இரவு தூங்குவதற்கு முன் காட்டன் பட்ஸ் கொண்டு மருக்களின் மேல் வையுங்கள்.இதேபோல் 2 நாட்கள் செய்தாலே போது அதற்குண்டான முழுப்பலனும் நிச்சயம் கிடைக்கும்.