திருகோணமலையிலிருந்து கண்டிக்குச் சென்ற பயணிகள் பஸ்ஸில் பிட்பொக்கட் அடித்த ஒருவரை பொது மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.
இச்சம்பவம் நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மூதூர் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரேயே பயணிகள் பிடித்து கந்தளாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது:
திருகோணமலையிலிருந்து நேற்று (21) மாலை 4.00 மணிக்குச் கண்டிக்குச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ்ஸில் நான்காம் கட்டையிலிருந்து ஏறிய சந்தேக நபர் பஸ்ஸில் தூங்கிய பிரயாணி ஒருவரின் பணப்பொதியை திருடிய வேளை மற்றொருவர் கண்டு கூக்குரலிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து பயணிகள் சந்தேக நபரை பிடித்து கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் தொடர்பாக திருகோணமலை, கந்தளாய் மற்றும் தம்பலாகாமம் போன்ற பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.